மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரகதி எனப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த 37வது ஆய்வு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அதில் ரயில்வே, சாலை போக்குவரத்து மற்றும் மின்சார துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் எட்டு முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
இதனை செயல்படுத்தும் மாநிலங்களின் அதிகாரிகளும் மத்திய அரசின் துறை அதிகாரிகளும் பங்கேற்ற திட்டத்தின் தற்போதைய நிலையைப் பற்றி கூறினர். அதுமட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைந்து செயல்படுத்த என அவர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.