கன்னட திரையுலகில் பிரபல நடிகையான சஞ்சனா கல்ராணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது இரண்டு பேரும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துவிட்டனர்.
இதையடுத்து நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடைய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் இரண்டு பேருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நடிகை சஞ்சனா பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.