தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதிபடைத்த பலர் பெற்றிருப்பதாகவும், முன்னுரிமை மற்ற குடும்ப அட்டைகளை வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக தரமான அரிசியை வழங்குவதற்கு தமிழக அரசு உறுதி ஏற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்யும், இந்த மாதம் இறுதிக்குள் கலர் ஷேடிங் என்ற அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவி உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.