தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரளாவில் ஓணம் பண்டிகையால் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோன்று நாம் மாநிலத்திலும் தொற்று அதிகரிக்காத வண்ணம் 10 நாட்களுக்கு மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பண்டிகை நாட்களில் கண்காணிப்பு குழு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஊரடங்கில் தளர்வு உள்ளது என்பதால் பொது மக்கள் அலட்சியமாக செயல்படக்கூடாது. கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் ஆகிவற்றை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.