பிஎம்சி வங்கி முறைகேட்டில் கைதான வங்கியின் முன்னாள் தலைவர் வரியம் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21,000 போலி கணக்குகள் மூலம் ரூபாய் 4350 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இது தொடர்பாக மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் அமிர்தசரசில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கி இருப்பது அம்பலமாகியுள்ளது.
இதுதவிர ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் துபாய்க்கு ஹவாலா மூலம் பணத்தை கொண்டு சென்று மேத்தா என்பவர் பெயரில் மீண்டும் இந்தியாவில் முதலீடாக மாற்றியது விசாரணையில் தெரிய வர, பிஎம்சி வங்கியின் முன்னாள் தலைவர் வரியம் சிங்க் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.