இத்தாலியின் மென்சா என்ற நகரில் வெறும் 87 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை வாங்குபவர்கள் அதில் வசிக்கிறார்களோ இல்லையோ, அவற்றை புனரமைப்பது கட்டாயம். இத்தாலி நகரான ரோமிற்கு 70 கிலோமீட்டர் வடக்கே இந்த நகரம் அமைந்துள்ளது.
இந்த நகரத்தில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் நகரத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்த நகரத்தின் மேயர் வெளியிட்டுள்ளார்.
இந்த நகரத்தின் வீடு வாங்குபவர்கள் அந்த வீட்டை எப்படி புதுப்பித்து பயன்படுத்த போகிறார்கள் என்பதை இழிவாக கூறவேண்டும். அதற்காக 5 ஆயிரம் யூரோக்களை டெபாசிட் செய்ய வேண்டும். வீட்டுப் பணிகள் முடிந்த பிறகு அந்த தொகை திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.