Categories
உலக செய்திகள்

செய்தி தொடர்பாளர் கொடுத்த பேட்டி…. மக்கள் தாயகம் திரும்ப அழைப்பு…. உறுதி அளித்த தலீபான்கள்….!!

தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் இங்கே திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தலீபான்கள் குழுவின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறுவதை நாங்கள் இனிமேல் அனுமதிக்கப் போவதில்லை. எங்களுக்கு அது மகிழ்ச்சியும் அளிக்கவில்லை.

இதனையடுத்து சொந்த நாடான ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் குவிவதை நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு படைகளுடன் இணைந்து எங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மட்டும் இங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் சொந்த பகுதியிலே பணியாற்றலாம். அதன்பின் வெளிநாடு சென்ற ஆப்கானிஸ்தான் மக்கள் மீண்டும் இங்கே வருமாறு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். மீண்டும் இங்கே வாருங்கள். நமது நாட்டை நாமே காப்போம்.

நாங்கள் இனிமேல் தாக்குதல் செய்யமாட்டோம். மக்கள் அனைவரும் இங்கேயே வேலை பாருங்கள். சுதந்திரமாக வாழுங்கள். இங்கு யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது. மேலும் பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அதில் சில வழிமுறைகளை வகுக்க உள்ளோம். அதுவரை மட்டும் பெண்கள் வீட்டில் இருக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். பின்னர் இங்கு இருக்கும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிப்போம். அவர்களது பணிக்கு நாங்கள் இடைஞ்சல்கள் கொடுக்க மாட்டோம். ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மதரசாக்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள், உள்ளூர் அரசு எப்போதும் போல் இயல்பாக செயல்படலாம்” என உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |