தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.