Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் ஷாக்…. ரூ.516,00,00,000 மோசடி… அமைச்சர் பகீர் தகவல் …!!

அதிமுக ஆட்சியில் பயிர் கடன் வழங்குவதில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த  ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடனுக்காக மூன்றே  நாட்களில் 16  லட்சம் பயனாளர்களை தேர்வு செய்வது எப்படி என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.  சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகிய மாநிலங்களின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்திற்குப் பின்னர் பதில் உரையாற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி,  ஒரே நபர் பல வகைகளில் நகை கடன் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 5,490 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நகைக்கடன் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் நகைக்கடன் தள்ளுபடி குறித்த ஆய்வு பணி  நடைபெற்று வருகிறது என்றும் அதன் பின்னர் தகுதிவாய்ந்த நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

மேலும் அதிமுக ஆட்சியில் பயிர் கடன் வழங்குவதில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த ஆட்சியில் பயிர் கடன் நகைக் கடனுக்காக மூன்று நாட்களில் 16 லட்சம் பயனாளர்களை தேர்வு செய்தது எப்படி  என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் அளிக்கப்படும் தொகை 10 லட்சத்திலிருந்து இருந்து 15 லட்சமாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர்வெளியிட்டார்.

Categories

Tech |