வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில்பருத்தி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுலோசனா என்ற மனைவி உள்ளனர். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்களால் இவர்கள் இரண்டு பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்போது பில்பருத்தி பகுதியில் வசிக்கும் ஹரிஷ், மகேஷ், பிரகாஷ்ராஜ், சந்துரு, எழிலரசன், வேலவன் ஆகிய 6 பேர் சேர்ந்த கும்பல் வயதான தம்பதியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் வயதான தம்பதியினரை கொலை செய்த வழக்கில் தொடர்பு கொண்டிருக்கும் ஹரிஷ், பிரகாஷ்ராஜ் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கூடுதலாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய 3 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.