காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை, அப்படியிருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் ஜெயலலிதா பெயரிலான பல்கலை., சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை உடன் இணைக்கப்படும் என்று அறிவித்தார்.. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் அரசு காழ்புணர்ச்சியுடன் செயல்படுவதாக கூறினார்.. மேலும் அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்…
திமுக அமைச்சர் பொன்முடி, நாகையில் உள்ள மீன்வளப் பல்கலை., சென்னையில் உள்ள இசைப் பல்கலை ஆகியவை ஜெயலலிதா பெயரில்தான் தொடர்ந்து இயங்கிவருகிறது என்று விளக்கமளித்தார்.. அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படவில்லை. காழ்புணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்து அதே பெயரில் தொடர்ந்திருக்குமா?, என்று அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகனுக்கு பதிலளித்தார்..