Categories
மாநில செய்திகள்

பிரதமராக தகுதியானவர் மு க.ஸ்டாலின்….! உலகளவில் செம பாராட்டாம்…. புகழ்ந்து தள்ளிய அமைச்சர் …!!!

தமிழக சட்டசபையில் நேற்று பேசிய அமைச்சர் கே.என் நேரு,  தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடந்து வந்த வெற்றி என்பது இமாலய வெற்றி. இந்த வெற்றி முதல்வர் அவர்களின் 50 ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இவர் கையில் ஆட்சியை கொடுத்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உங்கள் கையில் ஆட்சியை கொடுத்துள்ளார்கள். இந்த 100 நாட்களில் நீங்கள் அடைந்த உயரம் என்பது அதைவிட பெரியது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நீங்கள் இந்த 100 நாளில் இந்தியாவின் முதல் அமைச்சருக்கு எல்லாம் முதலமைச்சராக உயர்ந்து விட்டீர்கள். இந்தியாவே இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்களை உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் பிரதமருக்கு வராத யோசனையெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வந்துள்ளது.

அத்தகைய திட்டங்களை அமல்படுத்த இருக்கிறார் என்று அகில இந்திய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இந்தியாவின் பிரதமராக ஆவதற்கு அனைத்து தகுதிகளையும் படைத்தவர் தான் நம்முடைய முதலமைச்சர் என்பதை எண்ணி நாங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். முதல்வரை பாராட்டி இந்தி மொழியில், வங்காளத்தில் வாழ்த்து செய்தி அனுப்புகிறார்கள் என்றால், நம்முடைய ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்கும் தலைவராக உயர்ந்து விட்டார்கள்.

இந்தியாவின் அனைத்து மொழி பத்திரிகைகளும் பாராட்டு எழுதிவிட்டார்கள். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய வெளிநாட்டுப் பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி விட்டார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இப்படி ஒரு தலைவரை பெற்றதற்காக கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களில் ஒருவனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |