Categories
உலக செய்திகள்

தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்…. அழுத்தம் கொடுக்கும் பல நாடுகள்…. வேண்டுகோள் விடுத்த பிரபல நாட்டு சேன்ஸலர்….!!

ஜேர்மன் நாட்டு சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தலீபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் தங்கள் சொந்த நாட்டு மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, கனடா மற்றும் சுவிஸ் உட்பட பல நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கு மீட்பு விமானங்களை அனுப்பி அங்கிருந்து மீட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வரும் 31ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். எனவே அமெரிக்கர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து அழைத்து வருவதற்காக அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. பின்னர் குறித்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிற நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இந்த நிலையில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆப்கானிஸ்தானின் நலனை கருத்தில் கொண்டு அமெரிக்கா உட்பட பல நாடுகள் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்து ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்றத்தில் பேசும் போது கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் நாம் சேர்த்து வைத்த சாதனைகளை பாதுகாப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்காக நாம் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவ்வாறு நடந்தால் இந்த கடினமான சூழலிலும் ஆப்கானிஸ்தானில் நீதி மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல் 10 வருடங்களுக்கு முன் 20 சதவீத மக்களுக்கு கிடைத்துள்ள குடிநீர் தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்பின் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு பத்தில் இருவருக்கு கிடைத்த மின்சாம் தற்போது பத்தில் ஒன்பது பேருக்கு கிடைத்துள்ளது. இருப்பினும் தலீபான்களின் பிடியில் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. அதை ஏற்றுகொள்ள முடியவில்லை என்றாலும் நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்பது மறுப்பதற்கில்லை” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |