நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் முகம் தொடர்பான தகவல் ஒன்றை நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சியிலுள்ள ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் அலுவலகத்தின் மூலம் நாகர்கோவிலில் முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த முகாம் வருகிற 15.9.21 முதல் 30.9.21 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் இருக்கும் அறிஞர் அண்ணா மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதில் விண்ணப்பிக்க விரும்பும் நெல்லை இளைஞர்கள் வருகிற 30 ஆம் தேதி வரை WWW.Joinindianarmy.nic.in என்னும் இணைய தளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராணுவத்தில் எந்தெந்த பிரிவுகளில் எல்லாம் ஆட்கள் எடுக்கவிருக்கிறார்கள் என்பது தொடர்பான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் கிளார்க், சிப்பாய் நர்சிங் அசிஸ்டன்ட் மற்றும் சிப்பாய் பொதுப்பிரிவு போன்ற பிரிவுகளுக்கு அறிஞர் அண்ணா மைதானத்தில் வைத்து நடைபெறவிருக்கும் 5 நாள் முகாமின் மூலம் ஆட்கள் எடுக்கவிருக்கிறார்கள்.
இதற்கிடையே சிப்பாய் பொதுப்பணி பிரிவிற்கு விண்ணப்பிக்க விற்கும் இளைஞர்கள் 166 சென்டி மீட்டர் உயரத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் சிப்பாய் கிளார்க் மற்றும் டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் 162 சென்டி மீட்டர் உயரத்துடன் 12ம் வகுப்பு தேர்ச்சியையும் பெற்றிருக்க வேண்டும்.
இதனையடுத்து சிப்பாய் நர்சிங் அசிஸ்டன்ட் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் 165 சென்டி மீட்டர் உயரத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.