பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளலாம். வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்கியுள்ளார். குடும்ப ஓய்வூதியம் உயர்வு, வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு பண்டிகைக்கால பரிசாக வருகின்றது.
Categories