Categories
தேசிய செய்திகள்

இது புதுசா இருக்கே… சமூக வலைத்தளத்தில் ‘லவ் ப்ரொபோஸ்’… மறுத்த பெண்ணிற்கு ‘பீட்சா’ ஆர்டர் செய்து நூதன தொல்லை…!!!

பெங்களூருவில் திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தால், அவருக்கு மர்ம நபர் ஒருவர் பீட்சா ஆர்டர் செய்து தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்கா நியூ டவுன் போலீசுக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் 36 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு நபர் குறுந்தகவலை அனுப்பி உள்ளார். அதில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதை தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் வீட்டிற்கு பீட்சா எடுத்துக்கொண்டு பீட்சா ஊழியர் ஒருவர் வந்தார். அந்த பெண்தான் பீட்சா ஆர்டர் செய்யவில்லை என்று கூறியபொழுது, உங்கள் பெயரில் தான் பீட்சா வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பெண் பணம் கொடுத்து பீட்சாவை பெற்றுக்கொண்டார். இப்படி தொடர்ந்து அவர் வேலைபார்க்கும் அலுவலகம், வீடு என்று எங்கு சென்றாலும் பீட்சா அந்தப் பெண்ணின் பெயரில் வந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அந்த மர்ம நபர் நான் தான் உங்கள் பெயரில் பீட்சா ஆர்டர் செய்து அனுப்புகிறேன். நீங்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும் வரை நான் தொடர்ந்து பீட்சா அனுப்பிக் கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார்.

இதற்காக நீங்கள் செல்லும் இடத்தை கண்காணிப்பதற்கு தனியார் நிறுவனத்தின் மூலம் ஆள் ஒன்றை நியமித்து உள்ளேன் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அந்த மர்ம நபர் மீது புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |