அமெரிக்காவில் பிறந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற காபரே நடன மங்கையான கருப்பினப் பெண் ஒருவருக்கு பிரான்சின் உயரிய கௌரவம் ஒன்று அளிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்து பிரான்சில் குடியுரிமை பெற்ற ஜோஸ்பின் என்னும் கருப்பின பெண் காபரே நடனமாடுவதில் மிகவும் பிரபலமானவர் ஆவார். பிஇதனையடுத்து இவர் 2 ஆம் உலகப்போரின்போது பிரான்ஸ் அரசாங்கத்திற்கு உளவாளியாக செயல்பட்டு சில முக்கிய தகவல்களை பிரான்ஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
இதனால் இவருக்கு பிரான்ஸ் நாட்டின் சில உயரிய விருதுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் இறந்தபின் அவரது உடல் தனக்கு பிடித்த இடமான ஜோஸ்பினினுடைய வீட்டிற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ்பின்னிற்கு மீண்டும் ஒரு உயரிய கவுரவம் ஒன்றை அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதாவது 2 ஆம் உலகப்போரின் போது உளவாளியாக செயல்பட்ட ஜோஸ்பின்னுக்கு ஹீரோக்கள் அடக்கம் செய்யப்படும் French Pantheon of national heros என்னும் இடத்தில் ஒரு கல்லறையை அமைத்து அதில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.