Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. உலக வங்கியின் அதிரடி முடிவு…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது உலக வங்கி அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் உலக நாடுகள் அனைத்தும் தலிபான்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் உலக வங்கி அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தற்போது வரை வழங்கி வந்த நிதி உதவியை இனி அளிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது. மேலும் ஆப்கன் நாட்டின் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக தங்களது கவலையையும் உலக வங்கியின் சார்பாக அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |