Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 8 கோடி…. அது புதுசா வரப்போகுது…. மாவட்ட கலெக்டரின் ஆய்வு….!!

விளையாட்டு மைதானம் அமைக்க இருக்கும் இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட ஏகவலைவா மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடியபடியே கணினி குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். அதன்பின் பள்ளியின் பின்புறத்தில் மத்திய அரசு சார்பாக 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கூடிய மைதானம் அமைக்க இருப்பதாக இருக்கும் இடத்தை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார்.

இதனை அடுத்து வெள்ளிமலையில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு குடியிருப்பு திட்டத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்த கலெக்டர் அதே பகுதியில் புதியதாக3/4  கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா அலுவலகத்தையும் பார்வையிட்டுள்ளார். அதில் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

Categories

Tech |