Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை இணைகாதீங்க…. கிராம மக்கள் எதிர்ப்பு…. மாவட்ட கலெக்டருக்கு மனு….!!

நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை மற்றும் விவசாயத் தொழில்களையும், பின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பி தான் குடும்பம் நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர். இந்நிலையில்  நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருக்கோவிலூர் பகுதியுடன் மேலத்தாழனூர் ஊராட்சியை சேர்ப்பதாக தெரியவந்துள்ளது.

அதனால் மேலத்தாழனூர் ஊராட்சியை நகராட்சியுடன் சேர்த்தால் தங்களுக்கு விவசாய தொழில் பாதிக்கும் எனவும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை கிடைக்காது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் தங்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |