Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள்…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மைல்கல் மீது மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலேகுறி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் துணி தைக்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு லோகேஸ்வர சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஸ்வர சக்தி தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் சென்றுள்ளார்.

இதனை அடுத்து நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள மைல்கல் மீது பலமாக மோதியது. இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று லோகேஸ்வர சக்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |