Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? ஜப்பானின் அதிரடி உத்தரவு….!!

ஜப்பான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,500 பேருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் கொரோனாவின் மாறுபாடு மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 21,500 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 42 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதற்கிடையே ஜப்பான் நாட்டின் அரசாங்கம் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அமலுக்கு கொண்டு வந்துள்ள அவசர நிலை குறித்த கட்டுப்பாடுகள் வருகின்ற 27 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் அரசாங்கம் கொரோனா பரவலை முன்னிட்டு அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது தேசிய அளவிலான அவசரநிலை கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |