காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்று விடுங்கள் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொதுமக்களையும், வெளிநாட்டவர்களையும் அங்கிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிற நாடுகளுக்கு செல்ல வேண்டி காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள் என்று காபூலிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மேலும் காபூலிலுள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாவது, அமெரிக்க நாட்டின் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களை விமான நிலையத்திற்கு வாருங்கள் என்று அறிவுறுத்தினால் மட்டுமே காபூல் விமான நிலையத்திற்கு செல்லுங்கள் என்று ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க மக்களுக்கு தகவல் ஒன்றை கூறியுள்ளது.