கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் வழங்கிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாங்கல் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளனர். இவர் எம்.காம் பட்டதாரி. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான உஷாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு உஷாவை பரிசோதனை செய்த மருத்துவர் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் அவருக்கு ஏ பாசிடிவ் ரத்தம் தேவைப் படுவதாக கூறியுள்ளனர். ஆனால் அங்கு அந்த வகையான ரத்தம் இல்லாததால் ரத்த தேவை தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது.
இதனை அறிந்த துணை காவல்துறை சூப்பிரண்டு ராஜலட்சுமி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்துள்ளார். இதனையடுத்து உஷாவுக்கு பிரசவம் நடைபெற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த துணை காவல்துறை சூப்பிரண்டு ராஜலட்சுமிக்கு உஷாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் துணை காவல்துறை சூப்பிரண்டு ராஜலட்சுமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.