Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ 100 கோடி” சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்த அசுரன்…!!

வெளியான 11 நாட்களில் 100 கோடி வசூல்செய்து  வெற்றி மாறன் கூட்டணி சாதனை படைத்துள்ளது.

கடந்த அக்டோபர் நான்காம் தேதி வெளியான அசுரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் அபார வெற்றியை பெற்றுள்ளது. எந்த ஒரு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் இல்லாமல், எந்த ஒரு பிரமோஷனும் இல்லாமல் சிறப்பு காட்சிகள் இல்லாமல் அசுரன் திரைப்படத்தின் மூலமாக தமிழக மக்களின் மனதை வென்றுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறனுடன் நான்காவது முறையாக கூட்டணி வைத்து நடிகர் தனுஷ் நடித்த படம் அசுரன்.

Image result for asuran

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல் விஜய் அஜித் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தக்க வைத்துள்ள  நாட்களில் 100 கோடி சாதனை பட்டியலில் நடிகர் தனுஷ் அவர்களின் அசுரன் திரைப்படமும் இணைந்துள்ளது. படம் வெளியான 11 நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இவ்வளவு குறைந்த நாட்களில் 100 கோடி வசூல் செய்த தனுஷின் முதல் படம் அசுரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |