சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி காவல்துறையினர் ஆலம்பாடி-மேட்டூர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மணல் கடத்தி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் துரைசாமி மற்றும் செந்தில்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.