தெற்கு ஆசியாவில் பயங்கரவாதம் என்ற சூழல் உருவாகாமல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக முப்படைத் தளபதி உறுதி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றது. அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பக்கத்து நாடுகளான இந்தியாவிற்கு ஊடுருவ முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவச் விட மாட்டோம் என்று முப்படை தளபதி விபின்ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தது, ஆனால் அது குறுகிய காலத்தில் நடந்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்கள் எப்படி இருந்தார்களோ அதே போல் தான் தற்போது வரை இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகளை செயல்படுத்துவது என்று கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.