அடிப்பட்ட காகத்திற்கு சிகிச்சை வழங்கி காப்பாற்றிய வாலிபரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தோட்டத்துபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தனின் வீட்டின் அருகில் காகம் ஒன்று அடிபட்டு காயத்துடன் பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த ஆனந்தன் உடனடியாக காகத்தை மீட்டு திருப்பூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து ஆனந்தன் அங்கிருந்த ஊழியர்களிடம் காகத்திற்கு சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன்பின் அங்கிருந்த ஊழியர்கள் காகத்திற்கு ஏற்பட்ட காயத்தில் மருந்து தடவி கட்டு போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனந்தன் அந்த காகத்தை எடுத்துவந்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளார். ஆனால் அந்த காகம் பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. மேலும் ஐந்தறிவு கொண்ட காகம் அடிபட்டு சாலையில் கிடந்த போது அதனை கருணை உள்ளத்தோடு சிகிச்சை வழங்கி காப்பாற்றிய ஆனந்தனை அப்பகுதியில் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.