Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதே வியாபாரம் செய்வோம்” தந்தை-மகன்களுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் வெறிச்செயல்…!!

தந்தை, மகன்களை உறவினர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்த், சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் செல்வத்திற்கு உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில் செல்வத்தின் சித்தப்பாவான ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களான முருகானந்தம், குமார் போன்றோர் இணைந்து வாழை இலை வியாபாரம் செய்வதற்கு கும்பகோணத்தில் கடை பிடித்து தருமாறு செல்வத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு செல்வம் கடைபிடித்து கொடுக்கவில்லை.

இதனால் கோபத்தில் இருந்த ராமலிங்கம் குடிபோதையில் தனது மகன்களுடன் சென்று செல்வத்தை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமலிங்கம் குடும்பத்தினர் செல்வம் மற்றும் அவரது மகன்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த தந்தை, மகன்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ராமலிங்கம், முருகானந்தம், குமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |