Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு…. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. அதனால் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அடுத்த 10நாட்களுக்கு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 14 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இவை இன்னும் மூன்று நாட்களுக்கு போதுமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |