Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

கூலித் தொழிலாளியிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கும்பம்பாளையம் பகுதியில் தங்கவலசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தங்கவலசு குமரலிங்கம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சிவசெல்வம் என்பவர் தங்கவலசுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து சிவசெல்வம் தங்கவலசுவை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இந்நிலையில் தங்கவலசு, சிவசெல்வத்திற்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் சிவசெல்வம் தங்கவலசுவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். அதன்பின் சிவசெல்வம் தங்கவலசுவிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1,050 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து தங்கவலசு குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவசெல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை கைப்பற்றினர்.

Categories

Tech |