தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களின் மூன்று சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுடன் 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும். மேலும் சிறந்த ஆட்சியர்கள், முதன்மை கல்வி முதலமைச்சரின் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.