இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டிலிருந்த உணவுப் பொருட்களினுள் ஊசி மூலம் மர்ம பொருளை செலுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலுள்ள Waitrose, Tesco, sainbury போன்ற சூப்பர் மார்க்கெட்டிலிருக்கும் உணவு பொருட்களினுள் ஊசி மூலம் மர்ம பொருளை நபரொருவர் செலுத்தியுள்ளார். மேலும் இவர் மேற்கு லண்டனுக்கு சென்று அங்கிருக்கும் பொதுமக்களை மிகவும் ஆபாசமாக திட்டியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளை பேசிய நபரை பிடித்துள்ளார்கள். அதன் பின்பு அவர் ஊசி மூலம் உணவுப் பொருட்களில் மர்ம பொருளை செலுத்திய நபர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்ததோடு மட்டுமின்றி தீவிர விசாரணைக்கும் அழைத்து சென்றுள்ளார்கள். இந்நிலையில் அந்த நபர் மர்ம பொருளை செலுத்திய சூப்பர் மார்க்கெட்டிலிருந்து உணவு பொருட்களை வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் அதனை உடனடியாக குப்பையில் வீசி விடுங்கள் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.