சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் மணல் கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜா, சுரேஷ்குமார், அருண்குமார், அஜித் மற்றும் கார்த்திகேயன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.