Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. போதை மருந்து விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

போதை மருந்துகளை விற்பனை செய்த மருந்து கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த மருந்து கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையில் வாலிபர்களுக்கு போதை உண்டாக்கக்கூடிய மாத்திரைகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருந்து கடையின் உரிமையாளரான சாந்தி நகர் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |