Categories
உலக செய்திகள்

திடிரென ஏற்பட்ட விபத்து…. அரண்டு போன விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவரின் சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் என்னும் நிறுவனத்தைச் சார்ந்த விமானம் சுமார் 128 பயணிகளையும், 6 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு சியாட் நகரம் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென விமானத்திலிருந்த பயணி ஒருவரது சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிந்ததோடு மட்டுமின்றி வெடித்தும் சிதறியுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விமானிகள் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்கள். இதற்கிடையே திடீரென வெடித்து சிதறிய ஸ்மார்ட்போனின் தீயை விமானப் பணியாளர்கள் தீயை அணைப்பதற்கு பயன்படுத்தும் சாதனங்களைக் கொண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் இந்த தீ விபத்து காரணமாக பயணிகள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |