தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டிநாடு இனிப்பு பலகாரங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி ருசியான சமையல் பலகாரங்களுக்கு பெயர் பெற்றது. சுத்தமான தரமான எண்ணை மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால் வெளிநாட்டவரும் இதனை விரும்புகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு காரைக்குடி கோட்டையூர் கானாடுகாத்தான் கண்டனூர் போன்ற பகுதிகளில் மண் மணம் மாறாமல் பெண்களின் கை பக்குவத்தில்,
செட்டி நாட்டு பலகாரங்கள் சுவையான தேன் குழல் பதமான இனிப்பு சீடை முறுக்கு அதிரசம் மாவு உருண்டை இனிப்பு மணக்கோலம் தட்டை சீடை கைமுறுக்கு உள்ளிட்டவை காரம் இனிப்புக் கலந்தும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான உலகில் எல்லாம் எந்திரம் ஆனாலும் மண் மனம் மாறாத பெண்களின் கைப் பக்குவத்தில் தயாராக இருப்பதால் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல வெளிநாட்டு வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்