Categories
உலக செய்திகள்

நடுவானில் பழுதான ஹெலிகாப்டர்.. தரையில் விழுந்து விபத்து.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவின் மெக்ஸிகோவில், கடற்படை ஹெலிகாப்டர் நடுவானத்தில் பறந்தபோது பழுதடைந்து தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Grace சூறாவாளி ஏற்பட்டதில் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக Veracruz மாநில அரசு செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மெஸிக்கோ கடற்படைக்குரிய MI-17 வகை  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதில் விமானி உள்பட 20 நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, ஹெலிகாப்டர் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று ஹெலிகாப்டரின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.

எனவே அந்தரத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஹெலிகாப்டர், திடீரென்று Hidalgo மாநிலத்தில் இருக்கும் Agua Blanca என்ற பகுதியில், வீடுகள் இருக்கும் இடத்தில் விழுந்துவிட்டது. அப்போது அந்த வழியே வந்த வேன் மீது ஹெலிகாப்டர் விழும் நொடியில், வேன் ஓட்டுநர் வேகமாக வாகனத்தை ஓட்டிச்சென்றதால், பெரும் விபத்திலிருந்து தப்பினர்.

எனினும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று Veracruz மாநில கவர்னர் கூறியுள்ளார். மேலும், அரசு செயலாளர் மட்டும் காயமடைந்ததாகவும், அவர் மருத்துவமனையில் நன்றாக உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |