நெல்லையில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக வெயில் அடித்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து மணிமுத்தாறு, குற்றாலம், செங்கோட்டை, பாபநாசம் மற்றும் மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகர பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து மாலை நேரத்தில் திடீரென வானில் மேகங்கள் திரண்டது.
அதன்பின் சிறிது நேரத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1\2 மணி நேரம் நீடித்தது. இதனால் பாளையங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இந்த மழையால் நெல்லையில் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.