பயிர்களை சேதப்படுத்திய மயில்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற விவசாயி ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் தனது சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மக்காச்சோள பயிர்களை மயில்கள் வந்து சேதப்படுத்தி சென்றுள்ளது. அதனால் சந்திரன் பயிர்களை பாதுகாக்க வயலில் குருணை மருந்தை தூவிய நிலையில் அதை ஆண் மற்றும் பெண் என 5 மயில்கள் தின்று மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து மயில்கள் வயலில் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மயில்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.