Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ‘அனபெல் சேதுபதி’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அனபெல் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த படம் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் டாப்ஸி, யோகி பாபு, ராதிகா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Categories

Tech |