துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்க இலாகா பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த இரண்டு பேரிடமும், சார்ஜாவில் இருந்து வந்த ஒருவரிடமும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவுக்கு வந்த பயணி ஒருவர் 1600 சிகரெட் மட்டும் முகம் பூசும் கிரீம், ஆய்த்த ஆடைகள் ஆகியவற்றை கடத்தி வந்துள்ளார். அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று துபாயில் இருந்து வந்த ஒருவரிடம் 1573 கிராம் தங்கமும், மற்றொருவரிடம் 162 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சார்ஜாவில் இருந்து வந்த மற்றொரு பயணி தனது காலனி உரையில் 1, 595 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். இதனை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.