ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.
And thats a wrap! 🤟🏻
Except a couple of pickup shots, we are officially done with the entire shoot of #RRRMovie. Incidentally finished with the same bike shot that we started with on November 19th 2018. pic.twitter.com/lfXErpTbSS— RRR Movie (@RRRMovie) August 26, 2021
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.