இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, சக வர்ணனையாளர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி.வி.எஸ்.லக்ஷ்மண் கோட் சூட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய காணொலியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில் அவர் சக வர்ணனையாளர்களுடன் கோட் சூட் அணிந்து ‘கல்லி கிரிக்கெட்’ எனப்படும் தெருவோர கிரிக்கெட்டை விளையாடியுள்ளார். அப்போது அவர் பீல்டிங்கில் ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.அவர் அந்தப் பதிவில், ‘இது எனது மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று. ஏனெனில் முழு கோட் சூட் அணிந்து, இப்படி ஒரு கேட்சை பிடித்துள்ளேன்’ என பதிவிட்டு அவர் கேட்ச் பிடிக்கும் காணொலியையும் இணைத்துள்ளார்.தற்போது அந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது
Never knew one of my finest close in catches would come in a full suit and not whites 😅.. Sunday morning cricket coming up on #Cricketlive 11.30am @StarSportsIndia Hindi pic.twitter.com/8YUBfWAZeh
— VVS Laxman (@VVSLaxman281) October 13, 2019