Categories
சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் சுதா கொங்கரா?… வெளியான மாஸ் தகவல்…!!!

சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கும் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கும் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தை தயாரித்திருந்தது .

Sudha Kongara - Wikipedia

தற்போது இந்த நிறுவனம் கே.ஜி.எப்- 2, சலார் போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது. மேலும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படம் ஒரு பான் இந்தியா படம் என்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |