குளக்கரையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி குளக்கரை என்ற இடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் கனரக வாகனம் ஒன்று சென்றதால், தீட்டு சர்வீஸ் மின் இணைப்பு அறுந்து தொங்கியது. இதனை கவனிக்காமல் சென்றதால் குளக்கரை தெருவில் வசிக்கும் சிங்காரவேலு மற்றும் அரவிந்த் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்த செய்தியை கேட்டு முதல்வர் முக ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இருவரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.