Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்குள் அனுமதி இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியத்தற்கான சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு வகுப்பறைக்குள் அனுமதியில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரின் இந்த உத்தரவை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முழுமையாகப் பின்பற்றினால் மட்டுமே மாணவ மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |