Categories
தேசிய செய்திகள்

மக்களே… உங்களை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்… ராகுல்காந்தி வேண்டுகோள்…!!!

மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் ஆர்வம் காட்டி வருவதால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசின் சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பல கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சொத்துக்களை தேசிய பணமாக்கும் திட்டம் மூலம் நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு விற்பனை செய்து வருகின்றது என்று விமர்சித்திருந்தார். மேலும் தடுப்பூசி வினியோகத்தை விரைவு படுத்தாமல் சொத்துக்களை விற்பனையை அரசு தீவிரம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “அதிகரித்து வரும் கொரோனா பரவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. தீவிரமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசி வினியோகத்தை விரைவுபடுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு அதனை செயல்படுத்தாமல் நாட்டின் சொத்துக்களை விற்பனை மும்முரமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |