Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இரட்டை வேஷம் அம்பலம்” பகலில் மேஸ்திரி…. இரவில் பைக் திருடர்கள்…. அதிரடியாக கைது செய்த காவல்துறை…!!

வேலூரில் பகலில் கட்டட மேஸ்திரியாகவும் இரவில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூரில் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சுரேஷ், அஜித்குமார் என்றும் கட்டிட மேஸ்திரியான இருவரும் பகலில் கட்டிட வேலையிலும் இரவில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 20  இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |