முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார். இதையடுத்து அவருக்கு காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு மூன்றாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.